வாட்ஸ்அப்பில் இருந்து நடுவிரல் எமோஜியை அகற்ற கோரிக்கை

Report Print Kabilan in ஆப்ஸ்
77Shares
77Shares
ibctamil.com

வாட்ஸ்அப் செயலியில் உள்ள நடுவிரல் எமோஜியை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் குர்மீத் சிங், வாட்ஸ்அப் செயலியில் இருந்து நடுவிரல் எமோஜியை நீக்கக் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் மனுவில் கூறுகையில், ‘உணர்வுகளை மிக ஆழமாக வலைத்தளங்களில் வெளிப்படுத்த, பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் எமோஜி என்பது டிஜிட்டல் புகைப்படம் அல்லது ஐகான் எனலாம்.

வாட்ஸ்அப் செயலில் நடுவிரல் எமோஜி வழங்குவதன் மூலம் தண்டனைக்குரிய, சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட வாட்ஸ்அப் நேரடியாக உதவுவதாக உள்ளது.

இந்திய குற்றவியல் நடைமுறை பிரிவுகள் 354 மற்றும் 509யின் கீழ் மற்றவரை அவமதிக்கும், சண்டையிட தூண்டும், ஆபாசம் மற்றும் கீழ்தரமான சைகைகளை பெண்களிடம் பயன்படுத்துவது குற்றம் ஆகும்.

அந்த வகையில், வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள நடுவிரல் எமோஜியை, சட்ட அறிவிப்பில் உள்ள தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் நீக்க வேண்டும்.

அவ்வாறு நீக்காத பட்சத்தில் இவ்விவகாரம் தொடர்பாக குற்றவியல் வழக்கு தொடரப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்