சிக்னல் இல்லாத பகுதிகளில் உதவும்: புதிய ஆப் கண்டுபிடிப்பு

Report Print Printha in ஆப்ஸ்

இயற்கை சீற்றங்கள் போன்ற அவசர கால சூழ்நிலைகளில் சிக்னல் இல்லாத இடங்களில் கூட பயன்படும் வகையில் ஒரு ஸ்மார்ட்போன் ஆப்பை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த புதிய மொபைல் ஆப் அமைப்பு ஸ்பெயினில் யுனிவர்சிட் டி அலிகன்டே(UA) எனும் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய புதிய ஆப் பயன்பாட்டின் மூலம் பல்வேறு நன்மைகள் உள்ளது.

அதாவது, தொலைபேசியில் சிக்னல் இல்லாமலே மலை போன்ற தொலைதூர இடங்களில் விபத்து அல்லது ஆபத்து ஏற்படுவதை கண்டுபிடித்து, உயிர்களை காப்பாற்றுவதற்கு உதவி செய்யும் வகையில் உள்ளது.

ஆனால் இந்த ஆப் பயன்பாடு பொறுத்தவரை சிக்னல் இல்லாமல் வைஃபை(Wi-Fi) சிக்னல் மட்டுமே வைத்து செயல்படும்.

மேலும் பல கிலோமீட்டர் தொலைவில் மிக அருமையாக செயல்படக் கூடிய இந்த ஆப் விரைவில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் அனைத்து இடங்களிலும் பயன்படும்.

இந்த ஆப் குறைந்த செலவில் அதிக பயன்தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்