உலக அளவில் முடங்கிய வாட்ஸ் ஆப்

Report Print Kabilan in ஆப்ஸ்

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள மக்கள், ஒரே நேரத்தில் வாட்ஸ் ஆப் மூலமாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்ததால், வாட்ஸ் ஆப் சிறிது நேரம் முடங்கியது.

உலக முழுவதும் நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டம் கலைகட்டியது. இதனைத் தொடர்ந்து, மக்கள் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ள சமூக வலைதளமான வாட்ஸ்அப்பை பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், வாட்ஸ் ஆப் சுமார் அரைமணி நேரம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள ஏராளமான வாட்ஸ்அப் பயனாளிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்தியா உட்பட பிரித்தானியா, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, பனாமா, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் வாட்ஸ் ஆப் முடங்கியது.

இதனைத் தொடர்ந்து, பேஸ்புக், ட்விட்டர் போன்ற இதர சமூக வலைதளங்களில், பயனாளிகள் தங்களது அதிருப்தி பதிவிட்டு வெளிப்படுத்தினர்.

இந்த விடயம் குறித்து, வாட்ஸ்அப் நிறுவனம் எந்த அதிகாரபூர்வ தகவலையும் அளிக்கவில்லை. எனினும், Server செயலிழந்ததாலேயே இப்பிரச்சனை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்