இனி வாட்ஸ் அப் மூலமாக பணப் பரிமாற்றம் செய்யலாம்: வாட்ஸ் அப்பின் புதிய வசதி

Report Print Kabilan in ஆப்ஸ்
249Shares

வாட்ஸ்அப் செயலியில் பணப் பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை, அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி, அடுத்த மாதம் முதல் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பணப் பரிமாற்றம் செய்யும் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த வாட்ஸ்அப் வசதி, பணப்பரிமாற்றத்தை ஒருங்கிணைந்த Payment Interface கொண்டு நிறைவு செய்யும். இதற்காக, வங்கிகளுடன் இணைந்து பல்வேறு கட்டங்களில் UPI சார்ந்த வழிமுறையை செயல்படுத்த வாட்ஸ்அப் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில், 'Unified Payments Interface' மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்படுவது, கடந்த சில மாதங்களில் அதிக அளவில் நடைமுறையில் உள்ளது.

இதன்மூலமாக, கடந்த டிசம்பர் மாதம் மட்டுமே, 14.5 கோடி அளவில் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து State bank of india, Icici bank, HDFC bank, Axis bank உள்ளிட்ட வங்கிகள், வாட்ஸ்அப் பணப் பரிமாற்ற வசதியின் மூலமாக சேவையை வழங்கும் என தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் இந்த வசதியை செயல்படுத்த, வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதமே, மத்திய அரசின் அனுமதியை பெற்றுவிட்டது.

இந்நிலையில், இது குறித்து மூத்த வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘செயலியில் இந்த அம்சத்தை செயல்படுத்த பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தப்பட வேண்டும். SMS போல அதிவேகமாக பணம் அனுப்ப, பல்வேறு நிலைகளில் Encryption செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்