வாட்ஸ் ஆப்பின் வீடியோ அழைப்பு வசதியில் காணப்பட்ட குறைபாடு நீக்கம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

குறுஞ்செய்தி உட்பட குரல் வழி அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியினை வாட்ஸ் ஆப் செயலி தருகின்றது.

இச் செயலியின் ஊடாக வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும்போது எதிர்பாராத விதமாக குறித்த செயலியின் செயற்பாடு தடைப்படுவதுடன் தானாகவே செயலி மூடப்பட்டு விடுகின்றது.

குறிப்பாக அன்ரோயிட் மற்றும் ஆப்பிள் சாதனங்களில் பயன்படுத்தப்படும் செயலிகளிலேயே இப் பிரச்சினை எதிர்நோக்கப்பட்டுள்ளது.

இப் பிரச்சினையாது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பிரச்சினை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும்போது ஒன்றிற்கு மேற்பட்ட பரிமாற்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றமையே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இணையப் பக்கத்தில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் செயலியில் வீடியோ பரிமாற்றத்திற்கு மாற்று தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதனால் இப் பிரச்சினை எதிர்நோக்கப்படவில்லை என மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்