பேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள Borderline Content பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
20Shares

பேஸ்புக்கில் பகிரப்படும் தகவல்கள் குறுகிய நேரத்தில் வைரல் ஆகிவிடுகின்றன.

இதனால் சில ஆத்திரமூட்டக்கூடியதும், பரபரப்பான பதிவுகளும் பயனர்களின் விருப்பத்திற்கு மாறாக வைரல் ஆகி வருகின்றன.

இதனை தவிர்ப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதற்காக Borderline Content எனும் சொற்பதத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டத்தினை உருவாக்கவுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் எரிச்சலூட்டக்கூடியதும், பரபரப்பானதுமான பதிவுகள் வைரல் ஆகுவதை கட்டுப்படுத்தவுள்ளது.

இவ்வாறு கட்டுப்படுத்தப்படும் உள்ளடக்கங்களுள் ஆபாச மற்றும் நிர்வாண புகைப்படங்களும் அடங்கும்.

இந்த தகவலை பேஸ்புக் நிறுவுனர் மார்க் ஷுக்கர் பேர்க் ப்ளாக் ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்