சில வருடங்களுக்கு முன்னர் பரிமாற்றப்பட்ட குறுந்தகவல்கள் மீண்டும் புதிய குறுந்தகவலாக பேஸ்புக் மெசஞ்சரில் காட்சிப்படுத்தப்படுவதாக பயனர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இது தொடர்பாக பயனர் ஒருவர் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இவரை தொடர்ந்து பலரும் இத் தவறை சுட்டிகாட்டியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த பேஸ்புக் நிறுவனம் இப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது குறித்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கியுள்ளதாகவும், அப்பிளிக்கேஷனில் உள்ள அப்டேட்டில் குறைபாடு காணப்பட்டிருந்ததாகவும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.