புதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

புகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ்டாகிராம் திகழ்கின்றது.

இதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்ற நிலையில் ஒவ்வொரு ஸ்டோரியையும் மேல் கீழாக அசைத்து பார்வையிடும் வசதி தரப்பட்டுள்ளது.

ஆனால் மேல் கீழாக மாத்திரமன்றி இடது, வலது புறமாகவும் அசைத்து பார்க்கக்கூடிய வசதியை அறிமுகம் செய்தவற்கு இன்ஸ்டாகிராம் தீர்மானித்துள்ளது.

தற்போது இவ் வசதியை சில பயனர்களுக்க மாத்திரம் வழங்கி அவர்களின் பின்னூட்டல்களை பெற்றுவருகின்றது.

பின்னூட்டல்கள் சாதகமாக இருக்குமானால் விரைவில் ஏனைய பயனர்களுக்கும் இவ் வசதி கிடைக்கப்பெறும்.

இவ் வசதியை பரிசோதிக்கும் முயற்சிகள் இவ் வருடத்தின் அக்டோபர் மாதத்திலேயே இன்ஸ்டாகிராம் ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers