வீடியோ அழைப்பு மற்றும் சட்டிங் வசதியை தரக்கூடிய Duo எனும் அப்பிளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.
இந்த அப்பிளிக்கேஷனில் இரு புதிய வசதிகளை உள்ளடக்குவதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி குழு வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளும் வசதியையும், டார்க் மூட் எனப்படும் இருண்ட பின்னணியையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கணவே இவ்வாறான குழு வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதி வாட்ஸ் ஆப்பிலும், ஆப்பிள் நிறுவனத்தின் FaceTime அப்பிளிக்கேஷனிலும் காணப்படுகின்றது.
FaceTime அப்பிளிக்கேஷனில் ஒரே நேரத்தில் 32 பேர் குழுவாக வீடியோ அழைப்பினை ஏற்படுத்த முடியும்.
எனினும் Duo அப்பிளிக்கேஷனில் ஒரே நேரத்தில் வீடியோ அழைப்பினை எத்தனை பேர் ஏற்படுத்த முடியும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
ஏனைய அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக இருக்க வேண்டுமென்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.