ஓபியோயிட் மாத்திரை அளவுக்கு அதிகமாக எடுக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் மொபைல் அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

ஓபியோயிட் (Opioid) மாத்திரையானது அளவுக்கு அதிகமாக உள்ளெடுக்கப்படுவதனால் அமெரிக்காவில் நாள்தோறும் 115 பேர் வரை மரணிப்பதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது வலிகளிலிருந்து விடுபடுவதற்கு பொதுவாக பயன்படுத்தப்படும் மாத்திரையாகும்.

இம் மாத்திரையில் அனுமதியற்ற முறையில் ஹெரோயின் போதைப் பொருளும் உள்ளடக்கப்படுகின்றது.

இதனால் அளவுக்கு அதிகமாக உள்ளெடுக்கும்போது மூச்சடைப்பு, மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கின்றது.

எனவே இவ் அசம்பாவிதத்திலிருந்து தடுக்கும் நோக்கில் மொபைல் அப்பிளிக்கேஷன் ஒன்றினை வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த அப்பிளிக்கேஷன் நபர் ஒருவர் ஓபியோயிட்டினை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது அதனால் ஏற்படக்கூடிய மாற்றங்களின் ஆரம்ப நிலையை கண்டறியும்.

அதன் பின்னர் குறித்த நபரின் நண்பருக்கோ அல்லது அவசர சிகிச்சை பிரிவுக்கோ இது தொடர்பில் தானாகவே தகவல் அனுப்பும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்