அன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

இந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக சில புதிய ஈமோஜிக்களை அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்படி தனது புதிய அப்டேட்டில் புதிதாக 21 ஈமோஜிக்களை சேர்த்துள்ளது.

எனினும் இந்த வசதி தற்போது அன்ரோயிட் சாதனங்களில் மாத்திரமே கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.19.18 எனும் குறித்த பதிப்பினை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும் அல்லது அப்டேட் செய்துகொள்ள முடியும்.

சிறிய மாற்றங்கள் மாத்திரம் மேற்கொள்ளம் செய்யப்பட்டுள்ள இப் புதிய பதிப்பானது விரைவில் iOS சாதனங்களுக்காகவும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers