ஆப்பிளின் FaceTime அப்பிளிக்கேஷனின் குறைபாட்டிற்கு இதோ வந்துவிட்டது தீர்வு

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

குழுக்களாக இணைந்து வீடியோ அழைப்பினை ஏற்படுத்தி மகிழும் ஆப்பிளின் FaceTime அப்பிளிக்கேஷனில் குறைபாடு இருக்கின்றமை தொடர்பில் சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.

இக் குறைபாடானது FaceTime குழுக்களுக்கிடையே அழைப்புக்கள் இணைக்கப்படும் முன்னரே மற்றவர்கள் ஒட்டுக்கேட்கக்கூடியதாக இருந்துள்ளது.

எனினும் இக் குறைபாட்டினை நிவர்த்தி செய்து FaceTime அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பல ஆப்பிள் வாடிக்கையாளர்கள் இக் குறைபாடு தொடர்பில் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே iPhone, iPad மற்றும் iPod Touch போன்றவற்றிற்காக குறித்த புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அப்டேட் செய்வதற்கு ஆப்பிள் சாதனத்தில் Settings > General > Software Update எனும் பகுதிக்கு செல்லவும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...