நிழற்படங்களின் தரம் குறையாமல் வாட்ஸ் ஆப்பில் அனுப்புவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

தற்போதைய செல்பேசிகளில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் பொதுவாக அதிக தரம் வாய்ந்தவையாகவே இருக்கின்றன.

எனினும் வாட்ஸ் ஆப்பினுடாக அனுப்பும்போது நிழற்படங்களின் தரங்கள் குறைக்கப்படுகின்றன.

ஆனாலும் இவ்வாறு தரம் குறையாமல் அனுப்புவதற்கான வழிமுறைகள் சில இருக்கின்றன.

அவற்றில் ஒன்றினை இன்று பார்க்கலாம்.

முதலில் File Manager சென்று எடுக்கப்பட்ட நிழற்படத்தின் பெயரை மாற்றுவதற்காக Rename என்பதை தெரிவு செய்யவும்.

இதன்போது நிழற்படத்தின் பெயருடன் நீட்சியும் காண்பிக்கப்படும்.

உதாரணமாக flower.jpg என்பதில் .jpg என்பது நீட்சியாகும்.

இந்த நீட்சியை மாத்திரம் அழித்துவிட்டு .doc என மாற்றவும்.

அதாவது flower.doc என காண்பிக்குமாறு மாற்றியமைக்கவும்.

தற்போது இக் கோப்பினை வாட்ஸ் ஆப்பில் உள்ள கோப்பு அனுப்பும் வசதியின் ஊடாக (Paper Clip Icon) தெரிவு செய்து அனுப்பவும்.

அதன் பின்னர் குறித்த கோப்பினை பெற்றுக்கொண்டவர் அக் கோப்பின் நீட்சியை மீண்டும் flower.jpg என மாற்றியமைத்தால் போதும்.

தரத்தில் எந்தவித குறைவும் இன்றி குறித்த நிழற்படக்கோப்பு காட்சியளிக்கும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்