8 புதிய மொழிகளுடன் பீட்டா பதிப்பினை அறிமுகம் செய்தது ஸ்னாப்சாட்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

உலகின் மிகப்பெரிய புகைப்பட சாட்டிங் அப்பிளிக்கேஷனான ஸ்னாப்சாட் ஆனது புதிய பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது.

இப் பதிப்பில் 8 புதிய மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் 5 இந்திய மொழிகள் ஆகும்.

அதாவது ஹிந்தி, மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி மற்றும் உருது ஆகிய இந்திய மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவை தவிர மலே, வியட்நாமிஸ் மற்றும் பிலிப்பினோ ஆகிய மொழிகளும் தரப்பட்டுள்ளன.

பயனர்களின் எண்ணிக்கையினை விரிவுபடுத்துவதற்காகவே இவ்வாறு அதிக மொழிகளை உள்ளடக்கியதாக ஸ்னாப்சட்டின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மொழிகள் அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களில் கிடைக்கப்பெறும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers