3ம் நிலை செயலியில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவர்களுக்கு அந்நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Kavitha in ஆப்ஸ்

உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலி பரவலாக பயன்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தவர்களின் கணக்கு உள்ளிட்டவைகளையும், தனிப்பட்ட விபரங்களும் அடியோ முடக்குவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதனை அதிகாரப்பூர்வமான வரயில் கூகுள் பிளே ஸ்டார், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். எனினும் சிலர் மூன்றாம் நிலை செயலிகளை வைத்து வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

இப்படி தகவல் பயன்பாட்டு செயலிகளை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது எனவும் இதனால் தனிநபர் தொடர்பான தகவல்கள், அவருடையை புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட பிற விபரங்களை 3 ம் நபர் யார் வேண்டுமானலும் கையாளலாம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல் தெரிவிக்கின்றது.

இதன் காரணமாகவே 3ம் நிலை செயலியில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி வந்தோர்களின் கணக்கு முடக்கம் செய்தவாக வாட்ஸ் ஆப் அறிவித்துள்ளது

இதனால் இந்தியாவில் ஏராளமானோர் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் கணக்கு அடியோடு முடக்குவதாக இருக்கின்றது எனவும் இதில் அவர்களின் அனைத்து விபரங்களும் அடியோடு முடங்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது என வாட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்