மைக்ரோசொப்ட் ஸ்டோரிலிருந்து அதிடியாக நீக்கப்படும் வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

அன்ரோயிட் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டோரை கூகுள் நிறுவனம் அறிமுகம்செய்திருந்தது.

இது தவிர ஆப்பிள் நிறுவனமும் ஆப்ஸ் ஸ்டோரினை அறிமுகம் செய்திருந்தது.

இவற்றில் மின்புத்தகங்களை தரவிறக்கம் செய்யும் வசதியும் தரப்பட்டிருந்தது.

அதேபோன்றே மைக்ரோசொப்ட் நிறுவனம் மைக்ரோசொப்ட் ஸ்டோரினை அறிமுகம் செய்து மேற்கண்ட வசதிகளை பயனர்களுக்கு வழங்கியிருந்தது.

பயனர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ள நிலையில் மின்புத்தகங்களை தரவிறக்கம் செய்யும் வசதியை தனது ஸ்டோரிலிருந்து நீக்குவதற்கு மைக்ரோசொப்ட் முடிவு செய்துள்ளது.

இதன்படி கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதியிலிருந்து மின்புத்தகம் எனும் பகுதியினை (Category) நீக்கியுள்ளது.

அதேபோன்று எதிர்வரும் ஜுலை மாதம் முதல் எந்தவொரு மின்புத்தகத்தினையும் மைக்ரோசொப்ட் ஸ்டோரிலிருந்து வாசிக்க முடியாது.

எவ்வாறெனினும் தற்போது கொள்வனவு செய்த புத்தகங்களை ஜுலை மாதம் வரை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்