அன்ரோயிட், iOS சாதனங்களுக்கான ஸ்கைப்பில் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

இலவசமாக வீடியோ அழைப்பு, குரல்வழி அழைப்பு மற்றும் கோப்பு பரிமாற்ற சேவை என்பவற்றினை தரும் அப்பிளிக்கேஷனாக ஸ்கைப் காணப்படுகின்றது.

இதனை டெக்ஸ்டாப் கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

இதேவேளை இச் செயலியில் தரப்பட்டுள்ள ஸ்கிரீன் சேரிங் (Share Screen) வசதியானது டெக்ஸ்டாப் மற்றும் மடிக்கணினிகள் என்பவற்றிற்கு மாத்திரமே இதுவரை தரப்பட்டிருந்தது.

எனினும் முதன் முறையாக அன்ரோயிட், iOS சாதனங்களுக்காக இவ் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குழு வீடியோ அழைப்பினை ஏற்படுத்தும்போதும் இவ் வசதியை பயன்படுத்தக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

அத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குழு வீடியோ அழைப்பில் 50 பேர்வரை பங்குபற்றக்கூடிய வசதியையும் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers