பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்படும் அப்பிளிக்கேஷன்கள்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

அன்ரோயிட் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை பிளே ஸ்டோரின் ஊடாக கூகுள் நிறுவனம் பயனர்களுக்கு வழங்கி வருகின்றமை தெரிந்ததே.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள டெவெலொப்பர்களால் உருவாக்கப்பட்டு பிளே ஸ்டோரில் தரவேற்றம் செய்யப்படும் அப்பிளிக்கேஷன்களில் பல தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான சுமார் 100 அப்பிளிக்கேஷன்களை தற்போது கூகுள் நிறுவனம் நீக்குவதற்கு முடிவெடுத்துள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன்கள் அனைத்தும் சீன அன்ரோயிட் டெவெலொப்பர்களால் உருவாக்கப்பட்டவையாகும்.

இவற்றில் 46 அப்பிளிக்கேஷன்கள் DO Global எனும் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இத் தீங்கு பயக்கும் அப்பிளிக்கேஷன்கள் இதுவரை 600 மில்லியன் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்