புதிய வசதி ஒன்றினை பரிசீலணை செய்யும் இன்ஸ்டாகிராம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

இன்ஸ்டாகிராம் எனப்படும் பிரபல புகைப்படம் பகிரும் தளத்தினை பேஸ்புக் நிறுவனம் வாங்கியமை தெரிந்ததே.

பேஸ்புக்கில் தரப்பட்டுள்ள லைக்ஸ் பொத்தான் போன்று இன்ஸ்டாகிராமிலும் தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் புகைப்படம் ஒன்றினை எத்தனை பேர் லைக் செய்திருக்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

ஆனால் தற்போது இதில் மாற்றத்தை கொண்டுவரும் நோக்கில் பரிசோதனை முயற்சியில் இறங்கியுள்ளது இன்ஸ்டாகிராம்.

அதாவது புகைப்படங்களிற்கான லைக்ஸ் எண்ணிக்கையை புகைப்படத்தினை பகிர்ந்தவர் மாத்திரம் பார்வையிடக்கூடியவாறும் ஏனையவர்களுக்கு எண்ணிக்கையை மறைக்கும் வகையிலும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

இப் பரிசோதனையானது தற்போது கனடாவிலுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையான பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப் பரீட்சிப்பு வெற்றியளிக்கும் பட்சத்தில் விரைவில் ஏனைய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers