மேலும் பல கணக்குகளை முடக்கியது பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பேஸ்புக் நிறுவனமானது இன்ஸ்டாகிராம், மற்றும் பேஸ்புக் கணக்குகளை கடந்த வாரம் நீக்கியுள்ளது.

பல நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறான நடவடிக்கைகளை சில வருடங்களுக்கு முன்னர் இருந்தே பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இப்படியிருக்கையில் உண்மைக்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 265 பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

இக் கணக்குகள் அனைத்தும் இஸ்ரேலுடன் தொடர்புபட்டதாக இருந்துள்ளன.

அத்துடன் தென்கிழக்கு ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்க ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயனர்களுக்கு எதிராக இக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

இவற்றுள் 65 பேஸ்புக் கணக்குகள், 161 பேஸ்புக் பக்கங்கள், 12 பேஸ்புக் நிகழ்வுகள் மற்றும் 4 இன்ஸ்டாகிராம் கணக்குகள் என்பன அடங்கும்.

மேற்கண்ட கணக்குகள் சிலவற்றில் 2.8 மில்லியனிலும் அதிகமான பின்தொடர்பவர்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers