இன்ஸ்டாகிராமிலிருந்து கசிந்தது மில்லியன் கணக்கான டேட்டாக்கள்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பிரபலங்கள் உட்பட மில்லியன் கணக்கானவர்களின் தனிநபர் விபரங்கள் இன்ஸ்டாகிராமிலிருந்து கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையை தளமாகக் கொண்டு இயங்கும் Chtrbox நிறுவனமும், TechCrunch நிறுவனமும் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

சுமார் 49 மில்லியன் வரையான பயனர்களின் தகவல்கள் இவ்வாறு கசிந்துள்ளன.

பயனர்களின் விபரங்கள், புகைப்படங்கள், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, இருப்பிடங்கள், தொடர்பு இலக்கங்கள் உட்பட பல்வேறு தகவல்கள் இவற்றுள் அடங்குகின்றன.

இத் தகவல் கசிவின் பின்னர் Chtrbox நிறுவனம் பாதுகாப்பு கருதி தனது தரவுத்தளத்தினை Offline இற்கு கொண்டு வந்ததுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராமிலிருந்து இவ்வாறு பாரிய தகவல் கசிவு இடம்பெற்றமை இணைய உலகில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்