இன்ஸ்டாகிராமின் அதிரடி நடவடிக்கை: இனி இச் சேவையினை பயன்படுத்த முடியாது

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

உலகின் மிகப்பிரம்மாண்டமான புகைப்படம் பகிரும் தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.

இதற்கான மொபைல் அப்பிளிக்கேஷனில் Direct எனும் அப்பிளக்கேஷனும் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த அப்பிளிக்கேஷனை அடுத்த மாதம் முதல் நிறுத்தவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது இன்ஸ்டாகிராம்.

இதனை அடுத்து Direct அப்பிளிக்கேஷன் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வந்த உரையாடல்கள் அனைத்தும் இனி நேரடியாக இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷன்களிலிருந்து மேற்கொள்ளப்படும்.

பரிசோதனை முயற்சிகளுக்காக இந்த அப்பிளிக்கேஷன் ஆனது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக ஆறு நாடுகளில் மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது முற்றாக நிறுத்தப்படுகின்றது.

இதனால் அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களில் அடுத்த மாதம் முதல் Direct அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியாது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்