ஸ்னாப் சட்டில் பேபி பில்டரினை பயன்படுத்துவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

அண்மைக் காலமாக சமூகவலைத்தளங்கள் எங்கும் பிரபலங்களின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இது எப்படி சாத்தியம் என்று பலரும் எண்ணுவதுடன், போட்டோஷொப் மாயா ஜாலம் எனவும் எண்ணுகின்றனர்.

ஆனால் இது ஒரு Snapchat அப்பிளிக்கேஷனில் தரப்பட்டுள்ள Baby Filter எனப்படும் வசதியாகும்.

இதனைப் பயன்படுத்தி எந்த ஒரு முதியவரையும் குழந்தைப் பருவ தோற்றத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

இவ் வசதியினைப் பயன்படுத்துவதற்கு பின்வரும் படிமுறைகளை கையாள வேண்டும்.

முதில் Snapchat அப்பிளிக்கேஷனை திறந்து மொபைல் சாதனத்தின் முன்புற கமெராவினை செயற்படுத்த வேண்டும்.

அதன் பின்னர் இடது புறம் அல்லது வலது புறம் அப்பிளிக்கேஷன் மீது ஸ்வைப் செய்து Baby Filter வசதியினை பெற வேண்டும்.

குறித்த பில்டரினை தெரிவு செய்த பின்னர் புகைப்படம் எடுக்கப்பட வேண்டியவரின் முகத்தினை கச்சிதமாக குறித்த பில்டரினுள் பொருத்த வேண்டும்.

சரிபார்த்த பின்னர் புகைப்படத்தினை எடுத்தால் Baby Filter உடன் புகைப்படம் தயாராகிவிடும்.

இப்போது ஸ்னாப் சட்டில் புகைப்படத்தினை பகிர்ந்து மகிழ முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்