புதிய சரித்திரம் படைத்தது கூகுள் மெசேஜ் அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

கூகுள் நிறுவனம் மக்களுக்கு வழங்கி வரும் பல்வேறு சேவைகளுள் மெசேஜ் சேவையும் ஒன்றாகும்.

இதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன் ஒன்றினையும் அறிமுகம் செய்துள்ளது.

குறித்த அப்பிளிக்கேஷன் ஆனது கூகுள் பிளே ஸ்டோரில் 500 மில்லியன் தரவிறக்கங்களை எட்டி புதிய சரித்திரம் படைத்துள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இதன் ஊடாக எழுத்து வடிவிலான குறுஞ்செய்திகள், ஈமோஜிக்கள், ஸ்டிக்கர்கள், படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF கோப்புக்கள் என்பவற்றினை அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சிறந்த 25 மெசேஜ் அப்பிளிக்கேஷன்களுள் இது காணப்படுவதுடன் 4.2 ஸ்டார் ரேட்டிங்குடன் சிறந்த வரவேற்பினை பயனர்கள் மத்தியில் பெற்று காணப்படுகின்றது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்