டுவிட்டர் அறிமுகம் செய்யும் அட்டகாசமான புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் நீண்ட காலத்திற்கு பின்னர் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இத்தளமானது ஏற்கனவே நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய Live Stream சேவையினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

தற்போது இச்சேவையே புதிய வசதியினை உள்ளடக்கியுள்ளது.

இதன்படி நேரடி ஒளிபரப்பு ஒன்றினை 3 பயனர்கள் இணைந்து மேற்கொள்ள முடியும்.

கடந்த புதன் கிழமை இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை ஆப்பிளின் iOS மற்றும் கூகுளின் அன்ட்ரோயிட் சாதனங்கள் இரண்டிலும் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இப் புதிய வசதி பயனர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினை பெறுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்