வாட்ஸ் ஆப், பேஸ்புக் மெசஞ்சருக்கு போட்டியாக காணப்பட்ட சேவையை இனி பயன்படுத்த முடியாது

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் மாத்திரமன்றி சேவைகளிலும் பிளாக்பெரி நிறுவனம் பிரபல்யமடைந்திருந்தமை தெரிந்ததே.

எனினும் தற்போது இதன் செல்வாக்கு வெகுவாக குறைவடைந்துள்ளது.

இப்படியிருக்கையில அந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டிருந்த பிளாக்பெரி மெசஞ்சர் சேவையை கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன் நிறுத்தியுள்ளது.

இச் சேவையானது கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

பேஸ்புக் மெசஞ்சர் , வாட்ஸ் ஆப் போன்றவற்றிற்கு போட்டியாக இச் சேவை விளங்கி வந்தது.

எனினும் தற்போது இதன் பாவனை வெகுவாக குறைவடைந்துள்ள நிலையிலேயே பிளாக்பெரி நிறுவனம் குறித்த முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக டுவீட் ஒன்றினையும் பிளாக்பெரி நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

இதில் இன்று பிளாக்பெரி மெசஞ்சரின் இறுதி நாளாகும். இதுவரை தமது நினைவுகளை பிளாக்பெரி மெசஞ்சரில் பதிவு செய்து பரிமாறியவர்களுக்கு நன்றிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்