போக்குவரத்து விதிகளை மீறினால் உங்களை எச்சரிக்க வருகிறது புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

கூகுள் மேப் வசதி பற்றி அறியாதவர்கள் இன்று எவருமே இருக்க முடியாது.

அந்த அளவிற்கு உலகளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அப்பிளிக்கேஷனாக மாறியுள்ளது.

கூகுள் நிறுவனமானது குறித்த அப்பிளிக்கேஷனை அடிப்படையாகக் கொண்டு பல வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றமையே இவ்வாறு அதிக முக்கியத்துவம் பெறுவதற்கு காரணமாகும்.

இதன் வரிசையில் தற்போதும் மற்றுமொரு புதிய வசதியினை கூகுள் மேப்பில் உள்ளடக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது பயனர்கள் வீதிகளில் பயணிக்கும்போது வீதி போக்குவரத்து விதிகளை மீறும் சந்தர்ப்பங்களில் அவர்களை எச்சரிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இதனால் பயனர்கள் வீதி போக்குவரத்து பொலிசாரால் தண்டிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கின்றதுடன், விபத்துக்கள் ஏற்படுவதிலிருந்தும் தடுக்கின்றது.

இவ் வசதியானது தற்போது இந்தியா உட்பட 40 நாடுகளில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் படிப்படியாக ஏனைய நாடுகளுக்கும் விஸ்தரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்