புதிய வசதியை பயனர்களுக்கு தருவதற்கான சோதனை முயற்சியில் வாட்ஸ் ஆப்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பல சமூகவலைத்தள சேவைகள் தற்போது காணப்படுகின்றபோதிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கின்றது வாட்ஸ் ஆப் செயலி.

இச் செயிலியில் விரைவில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதாவது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் எனும் வசதி பயனர்களுக்காக ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை அறிந்ததே.

வாட்ஸ் ஆப்பில் உள்ள ஸ்டேட்டசினை பேஸ்புக் மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்களில் பகிரக்கூடிய மற்றுமொரு வசதியே புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதனை தற்போது சோதனை செய்துவருகின்றது வாட்ஸ் ஆப்.

இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டால் பேஸ்புக்கில் மாத்திரமன்றி இன்ஸ்டாகிராம், ஜிமெயில், கூகுள் போட்டோஸ் போன்றவற்றிலும் ஸ்டேட்டசினை பகிர்ந்துகொள்ள முடியும்.

எனினும் இவ்வாறு பகிர்ந்துகொள்ளப்பட்ட ஸ்டேட்டஸ் ஆனது 24 மணித்தியாலங்களின் பின்னர் தானாகவே நீக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்