ஆப்பிளின் இந்த சேவை பாதுகாப்பானது கிடையாது! பகீர் கிளப்பிய ஆய்வு நிறுவனம்

Report Print Kabilan in ஆப்ஸ்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த Sign in with Apple என்ற சேவை அவ்வளவு பாதுகாப்பானது கிடையாது என ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் நடைபெற்ற 2019 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர் நிகழ்வில், ஐ.ஓ.எஸ்.13, ஐபேட் ஓ.எஸ் மற்றும் மேக் ஒ.எஸ். கேட்டலினா உள்ளிட்ட இயங்குதளங்களை அறிமுகம் செய்தது.

மேலும், ஆப்பிள் மென்பொருட்களில் புதிய அம்சங்கள் மற்றும் செயல்திறன் மேம்படுத்தப்பட்டதோடு, Sign in with Apple எனும் பாதுகாப்பு சார்ந்த அம்சத்தையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது.

இந்த புதிய அம்சம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால், ஓபன் ஐ.டி.பவுண்டேஷன் இந்த அம்சம் செயல்படுத்தப்பட இருக்கும் வழிமுறைகளில் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆப்பிளின் Sign in with Apple அம்சம் பயனரின் தனிப்பட்ட விவரங்களை வலைதளம் அல்லது ஆப் டெவலப்பர்களுக்கு வழங்காது.

ஏனெனில், இது ட்விட்டர், கூகுள் மற்றும் பேஸ்புக் சேவைகளில் Sign in செய்வதற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு Sign in தளங்களில் இருப்பதை போன்ற பொதுவான வழிமுறையை தான் பயன்படுத்துகிறது.

இந்நிலையில் தொண்டு நிறுவனமான ஓபன் ஐ.டி. பவுண்டேஷன், இது பயனர்கள் தனித்தனி கடவுச்சொற்கள் இன்றி, அவர்களை உறுதிப்படுத்த டெவலப்பர்களுக்கு அனுமதி வழங்கிறது என்றும், இந்த அம்சத்திற்கும் ஓபன் ஐ.டி. கனெக்ட் அம்சத்திற்கும் வித்தியாசங்கள் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இவை பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை எனவும், இந்த அம்சம் ஓபன் ஐ.டி. கனெக்ட் மற்றும் Sign in with Apple டெவலப்பர்களுக்கு தேவையற்ற தொல்லையை ஏற்படுத்தி வருகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

ஓபன் ஐ.டி. பவுண்டேஷன் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்து, ஓபன் ஐ.டி. டெஸ்ட் சூட் பயன்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஆப்பிளை கேட்டுக் கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் தரப்பு ஐ.ஓ.எஸ். செயலிகள் Sign in with Apple அம்சத்தில் எஸ்.எஸ்.ஓ சேவைகளை ஒருங்கிணைக்க உத்தரவிட்டிருக்கிறது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்