வாட்ஸ் அப்பில் உருவாக உள்ள புதிய அம்சங்கள்..! பயனர்களுக்கு இனி எல்லாம் ஷார்ட்கட்

Report Print Kavitha in ஆப்ஸ்

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். பதிப்புகளில் புதிய அம்சம் விரைவில் சேர்க்கப்பட இருக்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் சாட் விண்டோவில் இருந்தபடி வாட்ஸ் அப்பில் வரும் மீடியாக்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது

இந்நிலையில் சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் அதில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகிறது.

அவ்வாறான புதிய அம்சமாக க்விக் எடிட் மீடியா ஷார்ட்கட் என்ற பெயரில் உருவாகியுள்ளது.

புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது என்றும், விரைவில் இது வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் இதனை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதில் வாட்ஸ்அப் செயலியினுள் புகைப்படம் திறக்கப்பட்டதும் எடிட் பட்டன் காணப்படுகிறது. இதனை க்ளிக் செய்தால் டெக்ஸ்ட், டூடுள் அல்லது தலைப்பை சேர்க்கும் வசதி காணப்படுகிறது.

புதிய அம்சத்தின் மூலம் எடிட் செய்யப்படும் புகைப்படம் பயனர்களின் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படுவதில்லை மற்றும் இதனால் ஸ்மார்ட்போன் மெமரியும் பாதிக்கப்படாது என கூறப்படுகின்றது.

மேலும் ஏற்கனவே இதேபோன்ற அம்சம் டெலிகிராம் போன்ற தளங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...