உலகத்தின் பல பாகங்களிலும் ஸ்தம்பிதம் அடைந்த டுவிட்டர்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

டுவிட்டர் சமூகவலைத்தளமானது நேற்யை தினம் உலகின் பல பாகங்களிலும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

முக்கியமாக இந்தியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்றவற்றில் ஸ்தம்பித்திருந்தது.

இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த ஸ்தம்பிதம் காரணமாக டுவிட்டர் தளத்தினை அப்பிளிக்கேஷன்கள் மற்றும் இணைய உலாவியில் திறக்க முடிந்திருந்த போதிலும் போஸ்ட்களை அப்டேட் செய்ய முடிந்திருக்கவில்லை.

அதேபோன்று அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களில் ‘can not retrieve tweets at the moment’ மற்றும் ‘something went wrong’ போன்ற செய்திகளை காண்பித்தது.

இது தொடர்பில் பல பயனர்கள் புகார் அளித்தும் இருந்தனர்.

எனினும் சில மணி நேரத்தின் பின்னர் டுவிட்டர் தளம் வழமைக்கு திரும்பியது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்