ஹேஸ்டேக்கிற்கு பிறந்தநாள் கொண்டாடிய டுவிட்டர்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

சமூகவலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஹேஸ்டேக் பயன்படுத்துவது மிகவும் பிரபலமானதாகும்.

ஒரே கருப்பொருளைக் கொண்ட போஸ்ட்களை காண்பிப்பதற்கும் அவற்றினை ட்ரெண்ட் செய்வதற்கும் இந்த ஹேஸ்டேக்குகள் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் ஹேஸ்டேக் அறிமுகம் செய்யப்பட்டு நேற்றுடன் 12 வருடங்கள் ஆகிவிட்டன.

இதனை Happy Birthda Hashtag என்று டுவிட்டர் கொண்டாடியது.

இதற்கிடையில் இந்த வருடம் இந்திய அளவில் முன்னணியில் ட்ரெண்ட் ஆன ஹேஸ்டேக் விபரத்தையும் டுவிட்டர் வெளியிட்டுள்ளது.

இதன்படி முதல் இடத்தில் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் (#Viswasam) திரைப்பட டைட்டில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதனை தொடர்ந்து #LokSabhaElections2019, #CWC19, #Maharshi, மற்றும் #NewProfilePic என்பன அடுத்தடுத்த இடங்களில் ட்ரெண்டிங்கில் இருந்ததாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்