டிக்டாக் செயலி குறித்து விசாரணையில் இறங்கிய அமெரிக்கா!

Report Print Abisha in ஆப்ஸ்

உலகம் முழுவதும் பெருபாலானோர் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ள டிக்டாக் செயலியினை விசாரணையில் உட்படுத்தியுள்ளது அமெரிக்கா.

சீனாவில் இருந்து டிக்-டாக் என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப் படுத்தியது.

இதனால், நன்மைகளை விட அதிகமான மோசமான விளைவுகள் ஏற்பட்டு வந்தது.

இந்த செயலியால் சமூக வலைத்தளங்களில் தவறான வீடியோக்கள் பதிவிடப்படுவதாகவும், அதனால் பல்வேறு தீமைகள் ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த செயலியை தடை செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னதாக இந்தியாவில் கூட ஒருமுறை அது தடைசெய்யப்பட்டு தடையை திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில், டிக் டாக் செயலியின் பாதுகாப்பு தன்மை குறித்து அமெரிக்க அரசு ஆய்வு செய்வதுடன், விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் அந்நிய முதலீடு தொடர்பான குழு விசாரணையை தொடங்கியுள்ளதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் டிக்டாக்கில் தணிக்கை மற்றும் தரவு சேகரிப்பு ஆகியவை கவலை அளிப்பதாக பல செனட்டர்கள் குறிப்பிட்டனர். இதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

தற்போதைய ஒழுங்குமுறை நடைமுறைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது, ஆனால் அமெரிக்க பயனர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் டிக்டாக் செயலி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers