அன்ரோயிட் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்யும் கூகுள் பிளே ஸ்டோரில் ஆன்டி இந்தியன் எனும் அப்பிளிக்கேஷன் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பஞ்சாப்பின் முதல்வர் அமரிந்தர் சிங் குறித்த அப்பிளிக்கேஷனை நீக்குமாறு கூகுளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்யக்கூடியதாக காணப்படும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது ISI நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாக குற்றும் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான அப்பிளிக்கேஷனை கூகுள் எவ்வாறு அனுமதித்தது? எப்படி அனுமதித்தது? என அமரிந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் காலத்தை தாழ்த்தாது உடனடியாக குறித்த அப்பிளிக்கேஷனை நீக்கி ISI குழுவிற்கான ஆதரவு அதிகரிப்பதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.