மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனாக மாத்திரமன்றி இணையத்தளத்திலும் வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்தலாம் என்பது தெரிந்ததே.
இவ்வாறு இணையத்தளத்தில் வாட்ஸ் ஆப் சேவையினை பயன்படுத்தும்போது Dark Mode வசதியினைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
இவ் வசதியினைப் பெறுவதற்கு கண்டிப்பாக குரோம் அல்லது பயர்பாக்ஸ் உலாவி பயன்படுத்த வேண்டும்.
அதுவும் லேட்டஸ் வெர்ஷகாவும் இருக்க வேண்டும்.
இதற்காக முதலில் Stylus எனும் நீட்சியினை குறித்த உலாவிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும்.
பின்னர் குறித்த நீட்சியினை கிளிக் செய்து ஓப்பின் செய்யவும்.
தொடர்ந்து வாட்ஸ் ஆப்பினை இணைய உலாவியில் திறக்கவும்.
தற்போது Stylus நீட்சிக்கான Popup விண்டோ காண்பிக்கப்படும்.
அதில் வாட்ஸ் ஆப்பிற்கான தீம்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
அவற்றில் Dark Mode Whatsapp தீமினை தெரிவு செய்து Apply செய்யவும்.