இன்ஸ்டாகிராமில் அதிரடி மாற்றம்: அடுத்த வாரம் முதல் பயனர்களுக்கு அறிமுகம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
64Shares

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் சேவைகளுள் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.

இது புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை பகிரக்கூடிய வசதியினை தருகின்றது.

இத் தளத்தில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான லைக் எண்ணிக்கையினை மறைப்பதற்கு தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த வாரமளவில் அமெரிக்காவில் உள்ள பயனர்கள் சிலருக்கு இவ் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இன்ஸ்டாகிராமின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Adam Mosseri தெரிவித்துள்ளார்.

இவ் வசதியானது ஏற்கணவே பேஸ்புக் தளத்தில் அவுஸ்திரேலிய பயனர்களுக்கு மாத்திரம் வழங்கி பரீட்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்