லைக்ஸ் எண்ணிக்கை மறைக்கப்படுவதை மேலும் விஸ்தரித்தது இன்ஸ்டாகிராம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பதிவேற்றப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பவற்றிற்கான லைக்ஸ் எண்ணிக்கையினை மற்றவர்கள் பார்வையிடுவதை தவிர்க்க இன்ஸ்டாகிராம் தீர்மானித்திருந்தமை தெரிந்ததே.

அத்துடன் இம் மாற்றத்தினை சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள சில பயனர்களுக்கு கிடைக்கச் செய்திருந்தது.

பரீட்சார்த்த ரீதியில் வழங்கப்பட்டிருந்த இம் மாற்றத்தினை தற்போது மேலும் விஸ்தரித்துள்ளது.

இதன்படி மேலும பல பயனர்கள் இம் மாற்றத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் இவ்வாறானதொரு மாற்றத்தினை முன்னர் அறிமுகம் செய்திருந்ததுடன், அவுஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்க வழங்கி சோதனை முயற்சியினை மேற்கொண்டிருந்தது.

இதனை அடுத்தே இன்ஸ்டாகிராமிலும் குறித்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்