வாட்ஸ் ஆப் தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பயனர்களின் தகவல்களை திருடுவதற்கும், உளவு பார்ப்பதற்கும் வாட்ஸ் ஆப் ஒரு இலகுவான ஊடகமாக இருப்பதாக இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு நிறுவனங்களின் ஆலோசனையின் இறுதியில் தனது நாட்டிலுள்ள வாட்ஸ் ஆப் பயனர்களுக்க இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தேசிய அளவில் தீவிர பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் MP4 வகை வீடியோ கோப்புக்களை வாட்ஸ் ஆப்பிற்கு அனுப்பி அதன் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதனை வாட்ஸ் ஆப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக் நிறுவனமும் ஏற்கொண்டிருந்ததுடன், இதிலிருந்து பாதுகாப்பதற்கு வாட்ஸ் ஆப்பின் புதிய பதிப்பினை அப்டேட் செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்