ஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களைக் கொண்டு தொடர்ந்தும் சமூகவலைத்தளங்கள் வரிசையில் பேஸ்புக் முன்னிலைவகித்து வருகின்றது.
தொடர்ந்தும் தனது பயனர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வரும் பேஸ்புக் தற்போது மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இதன்படி பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஏனைய தளங்களுக்கு இலகுவாக மாற்றம் செய்யக்கூடிய டூல் ஒன்றினை தரவுள்ளது.
உதாரணமாக பேஸ்புக்கில் உள்ள போட்டோக்களை கூகுள் போட்டோஸ் சேவைக்கு மாற்றம் செய்ய முடியும்.
தற்போது கூகுள் போட்டோஸிற்கு மாத்திரம் இவ் வசதியை பயன்படுத்தக்கூடியதாக இருக்குமாயினும் விரைவில் ஏனைய தளங்களிலும் பகிர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.