பயனர்களின் வயதை திரட்டும் இன்ஸ்டாகிராம்: காரணம் இதுதான்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
33Shares

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை பகிரும் பிரம்மாண்டமான தளமான இன்ஸ்டாகிராம் பயனர்களின் வயதை சேகரிக்க முடிவு செய்துள்ளது.

பேஸ்புக்கினை போன்று இன்ஸ்டாகிராமிலும் விளம்பரங்கள் செய்யக்கூடிய வசதி காணப்படுகின்றது.

எனவே அல்கஹோல் தொடர்பான விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்காக இந்த வயதெல்லை சேகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இன்ஸ்டாகிராம் பயனர்கள் அனைவரும் தமது பிறந்தநாள் தொடர்பான விபரங்களை அப்டேட் செய்யவேண்டியது அவசியமாகும்.

தற்போது 13 வயதிற்கு மேற்பட்டவர்களே இன்ஸ்டாகிராம் கணக்கினை உருவாக்க முடியும்.

இதேவேளை சுமார் ஒரு பில்லியனிற்கும் அதிகமான பயனர்களை தற்போது இன்ஸ்டாகிராம் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்