வாட்ஸ் ஆப்பில் ரிமைண்டர் வசதியை தர புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

கடந்த ஒரு மாதகாலத்தில் சில புதிய வசதிகள் வாட்ஸ் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் ஞாபகமூட்டல்களை (Reminers) மேற்கொள்ளக்கூடிய வசதியும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ் வசதியை பெறுவதற்கு பிறிதொரு அப்பிளிக்கேஷனையும் நிறுவ வேண்டும்.

Any.do எனும் மூன்றாம் நபர் அப்பிளிக்கேஷனே குறித்த வசதியினை வாட்ஸ் ஆப்பில் தருகின்றது.

இதற்காக வாட்ஸ் ஆப் நிறுவனத்துடன் Any.do இணைந்துள்ளது.

சாதாரண Reminder அப்பிளிக்கேஷன்களைப் போன்றே இதிலும் பல்வேறு வசதிகளைப் பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்