அவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பேஸ்புக் ஆனது ஏற்கணவே வாட்ஸ் ஆப்பில் Dark Mode வசதியினை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்கான பேஸ்புக் அப்பிளிக்கேஷனிலும் இவ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இரவு நேரங்களில் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இவ் வசதியானது பெரும் உதவியாக இருப்பதாக தெரிவித்து அனேகமான அப்பிளிக்கேஷன்களில் தரப்பட்டுவருகின்றது.

இதன் தொடர்ச்சியாகவே பேஸ்புக் நிறுவனமும் குறித்த வசதியினை வழங்கியுள்ளது.

இதேவேளை பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் அப்பிளிக்கேஷன்களில் Dark Mode வசதி தரப்படும் நான்காவது அப்பிளிக்கேஷனாகவும் இது காணப்படுகின்றது.

இதற்கு முன்னர் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் என்பவற்றில் இவ் வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்