இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்படும் புத்தம் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானதும் புகைப்படங்களை பகிரும் பிரபல தளமானதுமான இன்ஸ்டாகிராமில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் மூலம் ஒருவருடைய இன்ஸ்டாகிராம் கணக்குடன் தொடர்புபடுபவர்களை கண்காணிக்க முடியும்.

அதாவது இன்ஸ்டாகிராம் கணக்கினை பின்தொடராவிடினும் கூடிய தடவைகள் குறித்த இன்ஸ்டாகிராம் கணக்கினை பார்வையிடுபவர்கள் மற்றும் குறைந்தளவு தடவைகள் இன்ஸ்டாகிராம் கணக்கினை பார்வையிடுபவர்கள் தொடர்பான விபரங்களை அறியலாம்.

இந்த வசதியானது இன்னும் சில தினங்களில் சலக இன்ஸ்டாகிராம் பயனர்களுக்காகவும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இத் தகவலை இன்ஸ்டாகிராம் தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்