புதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் புதிய மைல் கல் ஒன்றினை எட்டி சரித்திரம் படைத்துள்ளது.

அதாவது உலகம் எங்கிலும் சுமார் 2 பில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டு சேவை வழங்கி வருகின்றது.

இந்த தகவல் பேஸ்புக் நிறுவனத்தினால் உத்தியோகபூர்வமாக நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

2016 தொடக்கம் 2018 வரையான காலப்பகுதியால் சுமார் 1 பில்லியன் பயனர்களைக் கொண்டிருந்த வாட்ஸ் ஆப் அதன் பின்னர் மேலும் ஒரு பில்லியன் வரையான பயனர்களை சம்பாதித்துள்ளது.

இதேவேளை பேஸ்புக் ஆனது 2.5 பில்லியன் பயனர்களையும், இன்ஸ்டாகிராம் 1 பில்லியன் பயனர்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் தரப்பட்டுள்ள என்கிரிப்ட் முறையிலான தரவுப்பரிமாற்றத்தினை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை என பிரதம நிறைவேற்று அதிகாரியான Cathcart தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்