கொரோனா வைரஸ் தொடர்பில் கூகுள் பிளே ஸ்டோரில் ஏற்படத்தப்பட்ட மாற்றம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

தற்போது கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான தகவல்கள் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

இதனை அடுத்து அவற்றினைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு பிரச்சனை உருவாகியுள்ளது.

அதாவது கூகுள் பிளே ஸ்டோரில் கொரோனா வைரஸ் தொடர்பான அப்பிளிக்கேஷன்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இதனை தவிர்ப்பதற்காக கூகுள் நிறுவனம் கொரோனா வைரஸ் தொடர்பான தேடலை Disable செய்துள்ளது.

எனவே கொரோனா வைரஸ் என தேடலை மேற்கொள்ளும்போது "No Result Found" என்ற செய்தியையே காண்பிக்கின்றது.

இதனால் மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான வழிநடத்தலுக்கு உள்ளாவதை தவிர்க்க முடியும் என கூகுள் நம்புகின்றது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்