கொரோனா வைரஸ் தொற்றினை கண்டுபிடிக்க மொபைல் அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

ஆசிய நாடுகளை மாத்திரமன்றி ஏனைய கண்டங்களிலுள்ள நாடுகளிலும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது கொரோனா வைரஸ்.

இதனை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் திணறிவருகின்ற நேரத்தில் மொபைல் அப்பிளிக்கேஷன் மூலம் குறித்த வைரஸ் தொற்றினை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.

தற்போது இதற்கான அப்பிளிக்கேஷன் ஒன்றினை சிங்கப்பூரில் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது சுமார் 2 மீற்றர்கள் தூரம் வரை இருப்பவர்களை ஆராய்ந்து கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தகவலை அளிக்கவல்லது.

TraceTogether எனப்படும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது Bluetooth சமிக்ஞையின் உதவியுடனேயே தொழிற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்