பேஸ்புக் அறிமுகம் செய்யும் Quiet Mode வசதி பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பேஸ்புக் நிறுவனமானது தனது மொபைல் அப்பிளிக்கேஷனில் Quiet Mode எனும் புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

இதன் பிரதான பயனாக Notification - களை நிறுத்துதல் காணப்படுகின்றது.

இது தவிர வீட்டில் தங்கியிருத்தல் உட்பட அன்றாட பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனால் நண்பர்கள், குடும்பத்தவர்களுடனும் திட்டமிட்டு உங்கள் நேரங்களை செலவு செய்ய முடியும்.

இந்த தகவலை பேஸ்புக் நிறுவனமே உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இவ் வசதியானது iOS மற்றும் Android சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களில் கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்