விரைவில் அறிமுகமாகின்றது WhatsApp Pay வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பல மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் ஆனது இந்தியாவில் WhatsApp Pay வசதியினை அறிமுகம் செய்வதற்கு கடந்த சில வருடங்களாக முனைந்து வருகின்றது.

எனினும் இந்திய பணப்பரிமாற்ற சட்டதிட்டங்களுடன் முரண்பாடுகள் காணப்பட்டமையினால் இழுபறி நிலையில் காணப்பட்டது.

எனினும் தற்போது இந்திய பணப்பரிமாற்ற சட்டதிட்டங்களுக்கு இணங்கக்கூடிய வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே விரைவில் National Payments Corporation of India (NPCI) இதற்கான அனுமதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இதன் முன்னோட்ட திட்டத்திற்காக ஒரு மில்லியன் தொடக்கம் 10 மில்லியன் வரையான பயனர்களுக்கு மாத்திரம் இச் சேவை வழங்கப்படலாம் என தெரிகிறது.

இந்தியாவில் இத் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் ஏனைய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்