Zoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

குழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு பல அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.

எனினும் அண்மைக்காலமாக Zoom எனப்படும் அப்பிளிக்கேஷன் ஆனது மிகவும் பிரபலமாகக் காணப்படுகின்றது.

இப்படியிருக்கையில் இந்த அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக Messenger Room எனும் வசதியினை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது குறித்த வசதி இன்றிலிருந்து பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பயனர்களுக்கு இவ் வசதியை பெறுவதற்குரிய தெரிவு பேஸ்புக் அப்பிளிக்கேஷனில் தரப்பட்டுள்ளது.

அத்துடன் உலகளாவிய பயனர்களுக்கு இதற்கான தெரிவு மெசெஞ்சர் அப்பிளிக்கேஷனில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்