அதிக பாதுகாப்புடைய அப்பிளிக்கேஷனாக விஸ்வரூபம் எடுக்கும் Zoom

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

மிகவும் பிரபல்யமான வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷனாக Zoom காணப்படுகின்றது.

குறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்த போதிலும் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் காரணமாக பல தடங்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

எனினும் குறைகளை தொடர்ந்து நிவர்த்தி செய்துவருகின்றது Zoom.

இந்நிலையில் கடந்த மாதம் end-to-end encryption தொழில்நுட்பம் மூலம் மேலும் பாதுகாப்பினை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தற்போது அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி கட்டணம் செலுத்தி சேவையினைப் பெறுபவர்களுக்கு மாத்திரம் குறித்த பாதுகாப்பு வசதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்